ஃபெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஃபெப்ஸி அமைப்பின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செல்வமணி, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஃபெப்ஸி அமைப்பின் உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரைப்படங்கள் ஃபெப்ஸி உறுப்பினர்களுடன் பணிபுரியவேண்டும். இது தயாரிப்பாளர் சங்க, இயக்குநர் சங்கம் போன்றவற்றுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஃபெப்ஸி ஊழியர்களுக்குத் தினசரி ஊதியம் வழங்கப்படும்.
ஃபெப்ஸி அமைப்பின் பொன்விழா ஆண்டாக உள்ளதால் அது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படும்.
தமிழ்த் திரைப்படத் துறை 100 ஆண்டுகளைக் கடந்துள்ளதால் அதன் விழாவையும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையும் இணைத்து ஒரே விழாவாகக் கொண்டாடப்படும்.
தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலை மாறிட தமிழக அரசு பழைய முறைப்படி பழைய கட்டண விகிதங்களில் பொது இடங்களில் படப்பிடிப்புக்கான கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்கவேண்டும்.
தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் கதாநாயகிகள் தங்களுடைய மேக்கப் காஸ்டியூம் உதவியாளர்களை மும்பையிலிருந்து அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும். நமது சம்மேளன தொழிலாளர்களையே பணிக்கு அமர்த்தவேண்டும்.
இவ்வாறு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டன.
23 திரை அமைப்புகளின் ஒருங்கிணைந்த தலைமையகமாக ஃபெப்ஸி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த முறை பதவி வகித்து வந்த சிவா தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னையில் உள்ள ஃபெப்ஸி அலுவலக வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்தலில், வாக்கு எண்ணிக்கை பிற்பகலில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் பதவிக்கு சண்முகம் தேர்வானார். பொருளாளராக சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


