விஸ்வரூபம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள்...


விஸ்வரூபம் 2 படம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக விளம்பரப் பணிகளைத் தொடங்கியுள்ளார் கமல். இதையடுத்து படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
சில நாள்களுக்கு முன்பு, ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜிப்ரான், விஸ்வரூபம் 2 பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறினார். இப்படத்தின் உதவி இயக்குநரும் இயக்குநருமான ராஜேஷ் கூறும்போது: ஆமாம். விஸ்வரூபம் 2 படப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதே குழுவுடன். விஸ்வரூபம் படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விஸ்வரூபம் படத்தை விடவும் இது பெரிய படமாக இருக்கும் என்று கூறினார்.
கமல் நடித்து இயக்கி வரும் இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...