வேலையில்லா பட்டதாரி படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ள தனுஷ், வடசென்னைப் படத்தின் இரண்டாவது பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பிரேசில் செல்லவுள்ளார்.
பிரெஞ்சு நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard', ஹாலிவுட் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். அவருடன் இணைந்து Uma Thurman மற்றும் Alexandra Daddario போன்றோரும் நடிக்கிறார்கள். Marjane Satrapi இயக்குகிறார்.
தற்போது வடசென்னை படத்தின் இரண்டாவது பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். விரைவில் பிரேசில் செல்ல உள்ள தனுஷ், அடுத்த மூன்று மாதங்களை ஆங்கிலப் படத்துக்காக ஒதுக்கியுள்ளார்.
தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ள இந்தப் படம், ஜூலை 28-ம் தேதி வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


