மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெளியானது நடிகர் விஷ்ணு விஷாலின் 'கதாநாயகன்' பர்ஸ்ட் லுக்!

புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கதாநாயகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2017, 11:55 am

சென்னை: புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கதாநாயகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் அவருடன் கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்பொழுது படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் கதாநாயகன் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.