சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

'பாகுபலி' பிரபாஸ் மீது ஜுவாலா கட்டா உருக்கம்!

பிரபாஸுக்கு தனது இதயத்தை வழங்குவதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

News image
Updated On :24 மே 2017, 6:52 am

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, பாகுபலி 2 படத்தைப் பார்த்துவிட்டார். இதையடுத்து பிரபாஸை எண்ணி உருக்கமாக ட்வீட்களை வெளியிட்டுள்ளார். 

பிரபாஸுக்கு தனது இதயத்தை வழங்குவதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். (கூடவே ரம்யா கிருஷ்ணனின் நடிப்பையும் ஒரு ட்வீட்டில் பாராட்டியுள்ளார்) 

Story image

பிறகு பிரபாஸின் புகைப்படத்தை வெளியிட்டு, ஓகே. நான் அப்படியே செத்தேன் என்று குறும்பாகவும் ட்வீட் செய்துள்ளார். அவருடைய இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்திலும் பிரபாஸின் பாகுபலி 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பாகுபலி 2 படத்தை நான்குமுறை பார்த்துவிட்டதாக ரசிகர் ஒருவருக்குப் பதிலளித்தார் ஜுவாலா. இந்த ட்வீட்களைப் பார்த்த ரசிகர் ஒருவர், ஒரு விளையாட்டு வீராங்கனை நடிகர் மீது காதல் கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன். புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளீர்கள் என்று கூறியதற்கு ஜுவாலா அளித்த பதில்: ஏன் கூடாது?

இதற்கு முன்பு ஒரு பேட்டியில், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்திருந்ந்தார் ஜுவாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.