6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீனாவில் ரூ. 800 கோடியைத் தாண்டியது டங்கல் பட வசூல்!

பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்கிற சூழலை உருவாக்கியுள்ளது.

News image
Updated On :26 மே 2017, 7:03 am

DIN

ஒருபக்கம் பாகுபலி 2 படம் ரூ. 2000 கோடி வசூலை நோக்கிச் சென்றுகொண்டிருக்க அமீர்கானின் டங்கல் படம் சீனாவில் அசுர சாதனை செய்துவருகிறது. அங்கு மட்டும் ரூ. 1000 கோடியை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு உள்ளது அதன் தினசரி வசூல் நிலவரம். 

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). அங்கு டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் வெளியானது. 

சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்த டங்கல், நேற்றுவரை ரூ. 809 கோடி சம்பாதித்துள்ளது. சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்கிற சூழலை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல், சீனாவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது டங்கல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.