/

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிரெய்லர்!

இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

News image
Updated On :26 மே 2017, 9:20 am

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான "பிக் பாஸ்', தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் வழங்க தயாராகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.  

சமூக நிகழ்வுகள் குறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் கருத்துக்களை எடுத்து வைக்கும் கமல், இந்நிகழ்ச்சியை வழங்க இருப்பது இதன் சிறப்புகளில் ஒன்று என விஜய் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கமல், "என் வாழ்க்கையின் பொது விஷயமோ, தனிப்பட்ட விஷயமோ எல்லாமே மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது எதிர்மறையாக இருக்கப் போகிறது. விதவிதமான அனுபவங்களைப் பெறப் போவது உறுதி. அந்தத் தருணங்களுக்காகக் காத்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிரெய்லரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.