டங்கல் படம் சீனாவிலும் வெற்றியடைந்ததற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டங்கல் படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). அங்கு டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் வெளியானது.
சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியைத் தொட்ட டங்கல் படத்தின் வசூல், தற்போது ரூ. 800 கோடியைத் தாண்டிவிட்டது.
சீனாவில் ஓர் இந்தியப் படம் இத்தகைய வசூலை பெற்றிருப்பது இதுவரை கண்டிராத ஒன்று. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் நான்கு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூலை எட்டிய டங்கல், தற்போது பிகே படத்தை விடவும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்கிற சூழலை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல், சீனாவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது டங்கல்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் டங்கல் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
அமீர் கான் மற்றும் டங்கல் குழுவுக்கு வாழ்த்துகள். சீன இதயங்களை மீண்டும் வென்றதற்காக என்று கூறியுள்ளார்.
இது ஏதோ அமீர் கான் படத்தில் ரஹ்மான் பணிபுரிவதால் சொல்லிய வாழ்த்து என்று எண்ணவேண்டாம்.
பிகே படத்துக்கு ஷாந்தனு மொய்த்ரா-அஜய்-அதுல்-அங்கித் திவாரி ஆகியோர் இசையமைத்துள்ளார்கள். டங்கல் படத்துக்கு பிரிதம் இசையமைத்தார். அமீர் கான் அடுத்து நடித்து விரைவில் வெளிவரவுள்ள சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்துக்கு இசை - அமித் திரிவேதி. இதனால் அமீர் கானின் சமீபத்திய படங்களுக்கு இசையமைக்காத ஏ.ஆர். ரஹ்மான், டங்கல் வெற்றியில் மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


