41 வயதிலும் இளமைத் தோற்றத்துக்குச் சொந்தக்காரர் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கும் அவரை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். உடல் எடையை பராமரிப்பதில் சுஷ்மிதா சென் எப்போதும் கவனமாக இருப்பார். சமீபத்தில் இவர் ஆப்ஸ் வொர்க் அவுட் (Abs Work out)செய்த போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில மணி நேரத்தில் அது வைரலானது.

ஃப்ரனிச்சர் கடையொன்றின் திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக சுஷ்மிதா சென் ஷார்ஜா சென்றுள்ளார். தொடர் பயணத்தில் இருக்கும் அவர் தனது புதிய வொர்க் அவுட் ஃபோட்டோவைப் பற்றிக் கூறுகையில், ‘பயணங்களுக்கு நடுவே மீண்டும் வொர்க் அவுட்டை தொடங்கிவிட்டேன். எனது 42 பிறந்த தின மாதத்தில் இந்தப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இத்தனை விரைவாக உடல் இளைக்க முடியாது என்று சிலர் குறை கூறலாம். ஆனால் நான் தொடர்ந்து வொர்க் அவுட் செய்து என் பிறந்த நாளுக்குள் உடலை கச்சிதமாக வைத்திருப்பேன். என்னுடைய உடல் என்னுடைய விதிமுறைகள். இதில் யார் என்ன சொல்வது? என் முகத்திலும் சரி உடலிலும் சரி அதன் ஒவ்வொரு நுனியையும் நான் கொண்டாடுகிறேன்...அவை முற்றிலும் எனக்குரியவை’ என்று பதிவு செய்திருந்தார்.

சுஷ்மிதாவின் இந்தக் கருத்துக்கு 95,274 லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கில் பாராட்டுரைகளும் குவிந்து வருகிறது. அவருடைய புகைப்படமும் தன்னுடல் சார்ந்து அவர் கூறிய விஷயங்களும் நெட்டிசன்களிடையே வைரலாகி விட்டது. சுஷ்மிதாவின் பிறந்த நாள் நவம்பர் 19 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


