தமிழ் படங்களில் சோதனை முயற்சிகள் உள்ளதா? ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!
ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் தற்போது உலகைச் சுற்றி வருகிறார்


ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் தற்போது உலகைச் சுற்றி வருகிறார். அவரது சமீபத்திய படமான 'ஒன் ஹார்ட்' ரஹ்மானை தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல தளங்களில் அடையாளம் காட்டியுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் நடந்த தன்னுடைய இசைக் கச்சேரிகளை குழுவினருடன் பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

மெர்சல், சங்கமித்ரா மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களுக்கு ரஹ்மான் தற்போது இசையமைக்கிறார். அவர் கோலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனர்கள் சிலருடன் பணிபுரிந்துள்ளார். ஆனால் பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபடும் நடிகர்கள் இங்கு உள்ளனரா என்று ஏ.ஆர்.ரஹ்மான் நம்புகிறாரா? அதற்கு அவர் கூறுவது, 'தமிழ் திரையுலகம் மிகவும் பெரியது, இங்கே நிறைய சோதனை முயற்சிகளைச் செய்கிறார்கள், ஆனால் அவற்றில் வன்முறை அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எல்லாமே எனக்கு வன்முறையாகத் தோன்றுகிறது.

ஒரு வருடத்தில் பல பெரிய படங்களுக்கு என்னால் வேலை செய்ய முடியாது, சில படங்களுக்குத்தான் என்னால் இசையமைக்க முடியும். அதுவும் திரைப்படத்தின் தேவை என்னவோ அதை மட்டுமே செய்ய முடியும்’ என்றார் இசைப்புயல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...