இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கார்த்திக் - கௌதம் கார்த்திக் இணையும் படத்தில் நடிக்கும் இரண்டு புகழ் பெற்ற இயக்குநர்கள்!

நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் முதன்முறையாக இணையும் படத்தில், தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குநர்கள் நடிக்கப் போகும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2017, 6:40 am

DIN

சென்னை: நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் முதன்முறையாக இணையும் படத்தில், தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குநர்கள் நடிக்கப் போகும் தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் திரு. தற்பொழுது அவர் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படத்தினை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது  அந்த படத்திற்கு 'மிஸ்டர் சந்திரமௌலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று மாலை டிவிட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்பொழுது அந்த படத்தில் தமிழில் தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குநர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது உதிரிப்பூக்கள், ஜானி உள்ளிட்ட மகத்தான படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் மற்றும் தமிழில் திரைக்கதைக்காக தேசிய விருது பெற்ற படமான காதல் கோட்டை படத்தை இயக்கிய இயக்குநர் அகத்தியன் ஆகிய இருவரே இத்திரைப்படத்தில நடிக்க உள்ளார்கள்.    

Story image

இந்த தகவலை வெளியிட்ட இயக்குநர் திரு கூறியதாவது:

தேசியவிருது பெற்ற இரண்டு முக்கிய இயக்குநர்களை வைத்து படம் இயக்கப் போவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற நடிகர்களை இயக்குவது போலல்லாமல் அவர்களை நான் அணுக முடியாது என்பது தெரிகிறது. மகேந்திரன் இந்த படத்தில் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். அதே நேரம் அகத்தியன் நடிகர் கார்த்திக்கின் நண்பராக நடிக்கிறார். கார்த்திக், மகேந்திரன் மற்றும் அகத்தியன் என்னும் இந்த கூட்டணி இந்த படத்திற்கு ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குநர் அகத்தியன் இருவரும் இதற்கு முன்னர் 'கோகுலத்தில் சீதை' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அத்துடன் அகத்தியன் இந்தத் திரைப்பட இயக்குநர் திருவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.