பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘லக்‌ஷ்மியின் என்டிஆர்’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தான் என்டிஆரா?

ஆனால் சமீபத்தில், என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரமான அந்தத் திரைப்படத்தில், என் டி ஆர் வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் நடிக்கவிருக்கிறார் என டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

News image
Updated On :11 அக்டோபர் 2017, 11:16 am

சர்ச்சைகளுக்குப் பெயர் போன இயக்குனரான ராம்கோபால் வர்மா, சில மாதங்களுக்கு முன் தனது அடுத்த புதிய திரைப்படமாக, ‘லக்‌ஷ்மியின் என் டி ஆர்’ என்றொரு திரைப்படத்தை அறிவித்திருந்தார். படத்தின் பெயரை அறிவித்தாரே தவிர, அதில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள்? என்பது குறித்தெல்லாம் எந்த விதமான தகவல்களும் இதுவரை வெளியிடவில்லை. 

ஆனால் சமீபத்தில், என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரமான அந்தத் திரைப்படத்தில், என் டி ஆர் வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் நடிக்கவிருக்கிறார் என டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அந்தச் செய்திகள் எதுவும் உண்மையில்லை என ராம்கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.  ‘லக்‌ஷ்மியின் என் டி ஆர்’ திரைப்படத்தின் மையக்கதை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களால் என் டி ஆர் என அன்பொழுக அழைக்கப் படும்  பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் வாழ்வில் அவரது இரண்டாவது மனைவியான லக்‌ஷ்மி பார்வதியின் வருகையைத் தொடர்ந்து அவரது அரசியல் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

என் டி ஆர், லக்‌ஷ்மி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டதில் அவரது குடும்பத்தினருக்கு அதிருப்தியே நிலவியது. எனவே அதையொட்டிய வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படியாகக் கொண்டு வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு ஆந்திரத்தில் பஞ்சமில்லை.

இந்நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் , இதுவரை வெளிவந்த தகவல்கள் தவறானவை என்றும் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

Image courtesy: thetelugufilmnagar.com

Related Article

ராணாவுடன் வெப்சீரியலில் நடிக்கிறாரா அக்‌ஷரா ஹாசன்?

பத்மாவதிக்காக முழு அலாவுதீன் கில்ஜியாக மாறி விட்ட ரன்வீர் சிங்கைப் பாருங்கள்!

அர்ஜூன் ரெட்டி தெலுங்குப் பட ரீமேக்கில் விக்ரம் மகன்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்: லதா ரஜினிகாந்த்

எப்போதுமில்லாத புது கெட்டப்பில் அசத்தும் நாகார்ஜுனா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.