இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சென்னையில் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி!

ஷெரில் மற்றும் அன்னா ஆகிய இருவரும் மேடையில் தோன்றி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடவுள்ளார்கள்...

News image
Updated On :11 அக்டோபர் 2017, 6:51 am

எழில்

ஜிமிக்கி கம்மல் பாடல் மூலமாகப் புகழ்பெற்ற ஷெரில் - அன்னா ஆகிய இருவரும் சென்னையில் உள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்கள்.

மோகன்லால் நடித்துள்ள வெளிபாடின்டெ புஸ்தகம் (Velipandinte Pusthakam) என்கிற மலையாளப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்டம்மேடெ ஜிமிக்கி கம்மல்’ பாடலைத் தெரியாத தமிழக இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். 

இந்தப் பாடலை முன்வைத்து கேரளாவின் ஐஎஸ்சி கல்லூரிப் பெண்கள் சிலர் ஆடிய வீடியோ சில வாரங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. கேரளாவை விடவும் தமிழக இளைஞர்களிடையே இப்பாடலும் பெண்களின் நடனமும் அதிகக் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மீம்களும் அதிகமாக உலவுகின்றன. 

இதனால், இப்பாடலில் பங்கேற்ற அக்கல்லூரி ஆசிரியர்களான ஷெரில், அன்னா ஆகிய இருவரில் ஷெரில் ஒரு கதாநாயகிக்கு உரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார். முன்வரிசையில் இருந்து அவர் ஆடிய நடனத்துக்காகவே இந்த வீடியோ இந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருடைய பேட்டிகளும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. தமிழகத்தில் புகழ் பெற்றுள்ளதால் தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளதாக ஷெரில் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில், ஷெரில், அன்னா ஆகிய இருவரும் சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்கள். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் அக்டோபர் 14, 15 ஆகிய தினங்களில் மாலை 6 மணிக்கு பாடகர் சித் ஸ்ரீராம் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 14 அன்று ஷெரில் மற்றும் அன்னா ஆகிய இருவரும் மேடையில் தோன்றி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடவுள்ளார்கள். இந்நிகழ்ச்சி குறித்த விவரங்கள் சித் ஸ்ரீராமின் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.