மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

'தல 58’மீண்டும் இணையுமா அஜித் - சிவா கூட்டணி?

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய வி படங்களின் வெற்றிக் கூட்டணியான அஜித் சிவா மீண்டும்

News image
Updated On :15 அக்டோபர் 2017, 8:26 am

DIN

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய வி படங்களின் வெற்றிக் கூட்டணியான அஜித் மற்றும் சிவா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். அஜித் நடிக்கும் புதிய படமான 'தல58' படத்தை மீண்டும் சிவாவே இயக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் மருமகளும், பாடகியுமான ஐஸ்வர்யா கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் சம்மதித்தால் அவரது அடுத்த படத்தை தயாரிக்க எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் இயக்குனர் சிவா அப்படத்தை இயக்கவிருக்கலாம் என்று கூறினார். 

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்  ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் கமிட் ஆக உள்ளார் என்ற செய்தியும் வைரலாகி வருகிறது. சிவா இயக்கவிருக்கும் படம் 2018 தீபாவளி அன்று வெளிவரலாம் என்றும் விஷ்ணுவர்தன் படம் 2019- பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. ஆனால் தல தரப்பிலிருந்து இது குறித்து எவ்விதத் தகவலும் வெளிவரவில்லை. தல 58 யார் இயக்கத்தில் வெளிவந்தாலும் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் காத்திருப்பது உண்மைதான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.