பத்மாவதி புகழ் நடிகர் ஷாகித் கபூர் சமீபத்தில் தனது செல்ல மகள் மிஷாவை மடியில் போட்டு தூங்க வைத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

அப்பாவின் அரவணைப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் மிஷாவின் புகைப்படம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

சமீபத்தில் ஒரு வயது நிறைவடைந்த மிஷாவின் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் ஷாகித்.

தந்தை மகள் உறவு என்பது உண்மையில் ஆனந்த யாழினினை மீட்டிச் செல்வது போன்ற ஒரு அற்புத உறவுதான். அம்மா மகன் உறவு கவிதை என்றால், தந்தை மகள் உறவு என்பது குறுங்கவிதை.

இந்தக் குட்டி தேவதைக்கு அவளது அப்பா பிரபலமான நடிகர் என்று தெரியாது. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் சதா சர்வ காலம் தன்னை நினைத்து தனக்காக ஓடோடி வரும் அன்பின் உருவம் மட்டுமே.

ஷாகித் கபூர் மீரா தம்பதியரின் முதல் குழந்தை மிஷா பிறந்து ஆறு மாதம் வரை மீடியாவின் கண் படாமல் பொத்தி வைத்திருந்த ஷாகித், சமீபத்தில் மகளுடன் கழிக்கும் சில பொன்னான பொழுதுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றத் தொடங்கினார். அன்புத் தந்தையாக ஷாகித்தின் அத்தருணங்கள் மிக அழகானவை.

அவை வைரலாகி அவரது ரசிகர்கள் இடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


