/

'1 மில்லியன்' லைக்குகளை அள்ளி 'மெர்சல்' சாதனை!

யூடியூப் சமூகவலைதள பக்கத்தில் 1 மில்லியன் லைக்குகளை அள்ளி மெர்சல் திரைப்பட டீஸர் சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2017, 12:04 pm

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் யூடியூப் சமூகவலைதள பக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. டீஸர் வெளியான 20 மணி நேத்தில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி (10,205,444) பார்வைகள் என விவேகம், கபாலி சாதனைகளை முறியடித்து புது சாதனை படைத்தது.

இந்நிலையில், யூடியூப் சமூகவலைதள பக்கத்தில் 1 மில்லியன் லைக்குகளை அள்ளி மெர்சல் டீஸர் புது சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக லைக்குகளை அள்ளிய தமிழ்ப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

இதுகுறித்து இத்திரைப்படத்தின் பாடலாசிரியர் விவேக் தான் எழுதிய மாயோன் பாடல் வரிகளை குறிப்பிட்டு இச்சாதனையைப் புகழ்ந்துள்ளார். 

Story image

இதனிடையே, விலங்குகள் நல வாரியம் இத்திரைப்படத்துக்கு தடையில்லா சான்று வழங்கியது. இதையடுத்து விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.