தீபாவளி பரிசாக பைக் வாங்கினார் மாதவன்!
தீபாவளியை முன்னிட்டு நடிகர் மாதவன் தனக்கு ஒரு அழகான பைக் ஒன்றை வாங்கியுள்ளார், தி ரோட் மாஸ்டர் (‘The Indian Roadmaster’)


தீபாவளியை முன்னிட்டு நடிகர் மாதவன் தனக்கு ஒரு அழகான பைக் ஒன்றை வாங்கியுள்ளார், தி ரோட் மாஸ்டர் (‘The Indian Roadmaster’) என்ற அந்த பைக்கின் விலை ரூ 40 லட்சமாம், பைக்குடன் ஒரு ஃபோட்டோ எடுத்து அதை தன் டிவிட்டர் பக்கத்தில் மாதவன் பகிர்ந்துள்ளார்.

‘என்னுடைய தீபாவளி இவனுடன் அட்டகாசமாகத் தொடங்கிவிட்டது. என்னுடைய பிக் பாய் இதோ என்னுடன்....மிகவும் சந்தோஷமாக உள்ளேன்’ “My Diwali started with this BANG. My Big Boy is here Yipeeeeee I am so excited).

இந்த புது பைக்கை வாங்குவதற்கு முன்னால் மாதவன் வாங்கியது BMW K1600 GTL மாடல் பைக் தான். மாதவன் உள்ளிட்ட தென்னிந்திய ஹீரோக்களான அஜித், சூர்யா, துல்கர் சல்மான், சுதீப் கிச்சா, தர்ஷன், புனீத் ராஜ்குமார் ஆகியோர் பைக் பிரியர்கள். இவர்கள் அனைவரிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட லேட்டஸ்ட் பைக்குகள் உள்ளன. மாதவனிடமும் சில வகை பைக் கலெக்ஷன் உள்ளது. விக்ரம் வேதா படத்தில் அவர் பைக்கை அசெம்பிள் செய்யும் காட்சிகளில் உண்மையில் ரசித்து நடித்திருப்பார்.

'சந்தா மாமா தூர் கே' எனும் இந்திப் படம்தான் அடுத்து மாதவன் நடிப்பில் வெளியாக உள்ளது. அதன் பிறகு இயக்குனர் சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...