இன்ஸ்டாகிராமைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதியின் புகைப்படம்!

தங்களது நட்புக்காலத்தில் போனிக்கு ரக்‌ஷாபந்தன் பண்டிகையன்று ராக்கி கட்டி தன்னை அவரது சகோதரியாகக் காட்டிக் கொண்டு பாசத்தைப் பரிமாறும் நிலையிலிருந்த ஸ்ரீதேவி பிற்பாடு
இன்ஸ்டாகிராமைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதியின் புகைப்படம்!
Published on
Updated on
1 min read

ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் சமீபத்திய அந்நியோன்யமான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் படு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருப்பதோடு. இருவர் மீதான விமர்சனங்களையும் தூண்டி விட்டுள்ளது. அப்படியெந்த விதத்தில் அந்த புகைப்படம் ஸ்பெஷல்? என்று கேட்கத் தோன்றலாம். மனைவியின் மீது காதல் மிகுந்த கணவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டு அதைப் புகைப்படமாக்கி ரசிப்பது அப்படியொன்றும் கொலை பாதகமில்லை. இங்கே ஸ்ரீதேவி & போனி கபூர் அப்படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராமில் பதிய, அதற்குத் தான் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

போனி கபூர், ஸ்ரீதேவியை மணப்பதற்கு முன்பே அவருக்கு மோனா கபூர் என்றொரு மனைவி இருந்தார். மோனாவின் தோழியாக போனி குடும்பத்துக்கு நெருக்கமானவர் தான் ஸ்ரீதேவி. தங்களது நட்புக்காலத்தில் போனிக்கு ரக்‌ஷாபந்தன் பண்டிகையன்று ராக்கி கட்டி தன்னை அவரது சகோதரியாகக் காட்டிக் கொண்டு பாசத்தைப் பரிமாறும் நிலையிலிருந்த ஸ்ரீதேவி பிற்பாடு மோனாவுக்குப் போட்டியாக மாறியதை விதி என்பதா? அல்லது சதி என்பதா? சூழல் நெருக்கடி என்பதா? நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், அது உங்களது உரிமை. ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் யாரிடமும் விவாதிக்கத் தயாரில்லை அது தேவையுமில்லை என்பது ஸ்ரீதேவியின் மனநிலை. அந்த மனநிலையுடன் இருப்பதால் மட்டுமே அவரால் போனியுடனான தனது திருமண காலத்தில் தங்களைச் சுழற்றி அடித்த பல்லாயிரக்கணக்கான விமர்சனக் கணைகளில் இருந்து பெரிதாக மனக்காயங்களின்றி தப்பமுடிந்தது என்பது ஸ்ரீதேவியை நன்கு அறிந்த அவரது நெருங்கிய நண்பர்களின் கருத்து!

போனிக்கு, மோனாவுடனான திருமணத்தில் அர்ஜூன் கபூர் என்ற மகனும், அன்ஷுலா கபூர் என்ற மகளும்; ஸ்ரீதேவியுடனான திருமணத்தில் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்களுமாக மொத்தம் 4 வாரிசுகள் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com