விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் பாலிவுட்டில் பிரபலமாகி, தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் புகழ்ப்பெற்ற நடிகையாகிவிட்டார் பிரியங்கா. சமீபத்தில் மெர்சல் குறித்த சர்ச்சைகளை அறிந்த பிரியங்கா தனது டிவிட்டரில், 'நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவருடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

ASKPC பிரியங்கா சோப்ராவிடம் கேளுங்கள் என்ற டேக்கில் (Tag) பிரியங்கா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை பதிவிடுகிறார். சாம்பிளுக்கு சில
ரசிகர் - பிரியங்கா சமீபத்தில் தொடர்ந்து 9 மணி நேரம் எப்போது தூங்கினீர்கள்?
பிரியங்கா - ஹா ஹா .... இந்த வார இறுதியில்....
**
ரசிகர் - உலகம் உங்களை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்கள், நடிகையாகவா அல்லது மனிஷியாகவா?
பிரியங்கா - இந்த உலகத்தின் முன்னால் ஒரு வெற்றியாளராகவும், என் அன்புக்குரியவர்களிடம் பிரியங்கா எனும் மனுஷியாகவும் அறியப்பட விரும்புகிறேன்.
Iâd like the world to know me as P.C. the achiever. And my loved ones to know me as P.C. the person @MehekMahtani #AskPC https://t.co/1LZDdYxJ8l
â PRIYANKA (@priyankachopra) October 24, 2017

ரசிகர் - உங்களைப் போல் ஒரு நடிகையாக என்ன செய்ய வேண்டும்?
பிரியங்கா - உண்மையாக இருங்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நான் அதைத் தான் செய்கிறேன்...
**
ரசிகர் - உங்களுடைய ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?
பிரியங்கா - பிடிக்கிறதோ இல்லையோ, தினமும் ஜிம்முக்கு கட்டாயம் போய்விடுங்கள்
**
ரசிகர் - நான் ஒரு செஃப்.. உங்களுக்கு செஃப்பாகி தினமும் சமைத்துத் தர ஆசைப்படுகிறேன். அது என் கனவு.
பிரியங்கா - ஹா ஹா...என் சமையல் நிபுணர் பசந்தி இதை விரும்புவாரோ இல்லையோ. நிச்சயம் ஒரு நாள் உங்கள் சமையலை ருசிக்க விரும்புகிறேன்.

ரசிகர் - ஒரு முட்டையை கான்க்ரீட் தரையில் உடைக்காமல் போடுவது எப்படி என்று தெரியுமா?
பிரியங்கா - ஆஹ்! எனக்கும் அது தெரிய வேண்டுமே! சயின்டிஃபிக் முறை எதாவது உள்ளதா?
**
ரசிகர் - பிரியங்கா உங்களின் வெறித்தனமான ரசிகர்கள் 20 மில்லியன் பேர் உள்ளார்கள்
பிரியங்கா - நீங்கள் தான் எனக்கு பிரியமானவர்கள். வெறுப்பாளர்கள் மேலும் வெறுக்கப் போகிறார்கள்...தக்காளி பறக்கப் போகிறது, ரொட்டி ரொட்டேட் ஆகப் போகிறது...என்ன ஆனாலும் சரி நாம் எப்போதும் ஒன்றாக இருப்போம்.
**
ரசிகர் - நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் திறம்பட செய்கிறீர்கள். எப்படி இது சாத்தியம்?
பிரியங்கா - ஸோ ஸ்வீட். ஹா ஹா. எனக்கு வெற்றியாளராக இருக்கப் பிடிக்கும். அவ்வளவுதான்.

ரசிகை - என்னுடைய பிறந்த நாள் வரப் போகிறது. நீங்கள் சொல்லும் வாழ்த்து தான் எனக்கான அதி அற்புதமான பிறந்த நாள் பரிசாக இருக்கும்.
பிரியங்கா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
Happy birthday @dxtxd1 #askpc #20millionforpc https://t.co/WU75r2vej8
â PRIYANKA (@priyankachopra) October 24, 2017
**
ரசிகர் - தற்போது உங்கள் வாழ்க்கையில் பெரிய லட்சியம் என்ன?
பிரியங்கா - அடுத்து நான் செய்ய வேண்டும் என்பதை கண்டு பிடிப்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








