விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்!
மேயாத மான் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாகி இருப்பவர் பிரியா பவானி சங்கர்.


மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருப்பவர் சின்னத் திரை பிரபலம் பிரியா பவானி சங்கர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் இரண்டாம் கதாநாயகியாக ஒப்பந்தம் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்கிறது பிரியா பவானியின் நெருங்கிய வட்டம். ஜுங்காவில் ஏற்கனவே சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். எனவே பிரியா பவானி சங்கர் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கலாம். தற்போது பிரான்ஸில் நடக்கும் படப்பிடிப்பு முடிந்ததும், சென்னையில் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள் படக்குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...