மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நான் மலையாளி அல்ல, தமிழ்ப் பெண்: ஊடகங்களிடம் நடிகை சாய் பல்லவி கோரிக்கை!

மலையாளப் படங்களில் நடிப்பதால் ஒரு நடிகையை மலையாளி எனலாமா? இதுதான் சாய் பல்லவியின் கேள்வி...

News image
Updated On :27 அக்டோபர் 2017, 9:34 am

எழில்

மலையாளப் படங்களில் நடிப்பதால் ஒரு நடிகையை மலையாளி எனலாமா? இதுதான் சாய் பல்லவியின் கேள்வி!

தமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாளப் படம் மூலமாக உச்சக்கட்டப் புகழை அடைந்தார். தாம்தூம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவரை உலகுக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தியது பிரேமம் படம்தான். இதன்பிறகு ஒரு மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். தமிழில் கரு, மாரி 2 என இரு படங்களில் நடித்துவந்தாலும் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

சமீபத்தில், சாய் பல்லவியை தெலுங்கு ஊடகங்கள் மலையாளி என்று குறிப்பிடுவதால் அவர் வருத்தம் அடைந்துள்ளார். தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண், எனவே என்னை மலையாளியாகக் கருதவேண்டாம் என தெலுங்குப் பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்செய்தி மலையாள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.