புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே: விஷால் மீது இயக்குநர் சேரன் விமரிசனம்!

ஒரே ஸ்டண்ட் காட்சியாக உள்ளதே என்று இயக்குநர் சேரன் விஷாலின் நடவடிக்கைகள் குறித்து விமரிசனம் செய்துள்ளார்...

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 10:45 am

எழில்

ஒரே ஸ்டண்ட் காட்சியாக உள்ளதே என்று இயக்குநர் சேரன் விஷாலின் நடவடிக்கைகள் குறித்து விமரிசனம் செய்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.

 தணிக்கையில் யு/எ பெற்ற இப்படம் நேற்று வெளியானது.

‘துப்பறிவாளன்’ படத்தின் திரையரங்கு வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, விவசாயிகள் குடும்ப நலனுக்காக அளிக்கப்படும் என்று நடிகரும் அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷால் சமீபத்தில் அறிவித்தார். 

விஷாலின் இந்த நடவடிக்கையை இயக்குநர் சேரன் விமரிசனம் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: 

சங்கம் கொடுத்துவந்த தயாரிப்பாளர் இன்சூரன்ஸ்-க்குப் பணம் கட்டாமல் 120 பேருடையதை ரத்து செய்யச் சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய். சூப்பர்ல. ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே. 1). தமிழ்சினிமாவே நான் வரலைன்னா அழிஞ்சிருக்கும் 2). தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு 3). விவசாயிக்கு ஒரு ரூபாய் என்று விஷாலின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.