மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

உலகளவில் அதிக லைக்ஸ்: அஜித்தின் விவேகம் டீசர் புதிய சாதனை!

உலகளவில் யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது....

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 10:14 am

எழில்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. 

கடந்த மே 11-ம் தேதி படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. நள்ளிரவில் 12.01 மணிக்கு டீசர் வெளியானவுடன் இதற்காகக் காத்திருந்த ரசிகர்கள் உடனடியாகச் சமூகவலைத்தளங்களில் அதைப் பகிர்ந்தார்கள். "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் "நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட' என உன் முன்னால் நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. NEVER EVER GIVE UP என்று அஜித் பேசிய வசனம் இணையத்தில் லட்சக்கணக்கானோரைப் பார்க்க வைத்தது. டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றது. 

கபாலி படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை அடைந்தது. அதுவே தமிழ்ப் படங்களில் உச்சபட்ச சாதனையாக இருந்தது.

 அந்தச் சாதனையை விவேகம் முறியடித்தது. 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை அடைந்தது. இதனால் கபாலியின் சாதனையை விவேகம் தாண்டியது. 

இந்நிலையில் விவேகம் டீசர் உலகளவில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 

'ஸ்டார்வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' என்ற ஹாலிவுட் படத்தின் டீசர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதுவே அதிக லைக்ஸ் பெற்ற படம் என்கிற பெருமையைக் கொண்டிருந்தது. இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் லைக்ஸ் எண்ணிக்கை தற்போது அதைக் கடந்து முதல் இடத்தை அடைந்துள்ளது. உலகளவில் யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இன்றைய நிலவரப்படி யூடியூபில் 5,74,000 லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

YouTube video thumbnail
YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.