போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வெள்ளியன்று 7 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன!

முதலில் 11 படங்கள் வெளிவர இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த ஏழு படங்கள் மட்டுமே...

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 8:58 am

எழில்

ஆயிரத்தில் இருவர், நான் ஆணையிட்டால், களவு தொழிற்சாலை, பயமா இருக்கு, வல்ல தேசம், கொஞ்சம் கொஞ்சம், 3 ரசிகர்கள் என ஏழு படங்கள் வருகிற வெள்ளியன்று வெளிவரவுள்ளன. ஆயிரத்தில் இருவர் படத்தை சரண் இயக்கியுள்ளார்.  ராணா டகுபதி, காஜல் அகர்வால் நடித்துள்ள நான் ஆணையிட்டால், தெலுங்கு டப்பிங் படமாகும். 

முதலில் 11 படங்கள் வெளிவர இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த ஏழு படங்கள் மட்டுமே வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் வருகிற வெள்ளியன்றுதான் சரியாக எத்தனை படங்கள் வெளியாகவுள்ளன என்பது திட்டவட்டமாகத் தெரியவரும்.

அடுத்த வாரம் ஸ்பைடர், கருப்பன், ஹர ஹர மஹா தேவகி என மூன்று படங்கள் வெளிவருகின்றன. அதன்பிறகு தீபாவளியன்றுதான் புதுப்படங்கள் வெளியாகும் என்கிற நிலைமை உள்ளதால் வருகிற வெள்ளியன்று வெளிவர பல படங்கள் முயற்சி செய்துவருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.