போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிரபல நடிகர்களின் படங்களும் வெளியீட்டுத் தேதிகளும்!

தமிழ்த் திரையுலகில் உருவாகிவரும் பெரிய நடிகர்களின் படங்கள் எப்போது வெளியாகும்...

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 9:09 am

எழில்

பெரிய நடிகர்களின் படங்கள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் இருப்பது ரசிகர்களின் வழக்கம். 

இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் உருவாகிவரும் பெரிய நடிகர்களின் படங்கள் எப்போது வெளியாகும் என்று பார்க்கலாம்... இந்தத் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை. 

மெர்சல் - அக்டோபர் 18 

Story image

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள 100-வது படம் இது. ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

தீரன் - அதிகாரம் ஒன்று - நவம்பர் 17

Story image

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் நவம்பர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 முதலில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

வேலைக்காரன் - டிசம்பர் 22 

Story image

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் வேலைக்காரன் பட வெளியீடு திடீர் என தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னமும் இரு பாடல்கள் படமாக்கப்படவேண்டும். பெரிய பட்ஜெட் படம் என்பதால் பண்டிகை சமயத்தில்தான் படத்தை வெளியிடமுடியும். அக்டோபரில் தீபாவளியன்று வெளிவர ஏற்கெனவே பல பெரிய படங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நவம்பரில் பெரிய பண்டிகைகள் எதுவும் இல்லை. எனவே டிசம்பர் வரை பொறுத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழிகள் இல்லை. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு அதிபர்களின் வேண்டுகோளின்படி கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களை முன்னிட்டு டிசம்பர் 22 அன்று வேலைக்காரன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் - ஜனவரி 12 

Story image

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

2.0 - ஜனவரி 25

Story image

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.