அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவ குசா: 6 நாள்களில் ரூ. 100 கோடி வசூல்!

உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 6 நாள்களில்...

News image
Updated On :27 செப்டம்பர் 2017, 5:14 am

எழில்

ஜூனியர் என்டிஆர், ராஷி கண்ணா, நிவேதா தாமஸ் நடிப்பில் பாபி (கேஎஸ் ரவிந்திரா) இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான படம் - ஜெய் லவ குசா.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

முதல் நாளன்று உலகம் முழுக்க ரூ. 47 கோடி வசூலித்த ஜெய் லவ குசா, 6 நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 6 நாள்களில் மொத்தமாக ரூ. 103 கோடி வசூலித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் இந்த 6 நாள்களில் ரூ. 71 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக கர்நாடகாவில் ரூ. 12 கோடியும் அமெரிக்காவில் ரூ. 9.50 கோடியும் வசூலித்து மெகா வெற்றி பெற்றுள்ளது. இந்த 6 நாள்களில் தமிழ்நாட்டில் இப்படத்துக்குக் கிடைத்த வசூல் - ரூ. 2.50 கோடி. 

Story image

ஜெய் லவ குசா படத்தின் இந்த வெற்றி குறித்து ஜூனியர் என்டிஆர் ட்விட்டரில் கூறியதாவது: இந்தப் படத்துக்கு நீங்கள் காண்பித்துள்ள ஆதரவு திருப்தியாக உள்ளது. இதை விட சிறந்த ஒன்றை எதிர்பார்க்கமுடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.