இசையமைப்பாளர் இளையராஜா தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
தனது 74-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 2) சென்னை காமராஜர் அரங்கத்தில் ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
மேஸ்ட்ரோஸ் மியூஸிக் நிறுவனத்தினர் இசையமைப்பாளர் இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய இந்நிகழ்வுகள் இரவு வரை நடைபெற்றன. இதில் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் ஆறு இசைக்குழுவினர்கள், இளையராஜா இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசைக் கலவையை வாசித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ஏராளமான இசை ரசிகர்கள் இளையராஜாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கமல் நேரில் வாழ்த்து: காமராஜர் அரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். 'காலா’ படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


