அடுத்த வாரம் அஅஅ, வனமகன், நெஞ்சம் மறப்பதில்லை என்கிற 3 பெரிய படங்கள் வெளிவருகின்றன. இதனால் இந்த வாரம் 5 சிறிய படங்கள் வெளியாகவுள்ளன.
இன்று பீச்சாங்கை வெளியாகியுள்ளது. நாளை 4 படங்கள் வெளியாகவுள்ளன. மரகத நாணயம், உரு, வெருளி, தங்கரதம் என மொத்தமாக இந்த வாரம் ஐந்து சிறிய படங்கள் வெளியாகவுள்ளன.
பாகுபலி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தமிழில் பெரிய அளவில் தாக்கத்தையும் வசூலையும் ஏற்படுத்தும் படம் வெளியாகவில்லை. அந்தக் குறையை இந்தப் படங்கள் போக்குமா? அல்லது அடுத்த வாரம் வரை காத்திருக்கவேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.