பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாகி வருவது எல்லோருக்கும் தெரிந்த செய்தியே! நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்ரி வேடத்தில் நடிப்பதும், துல்கர் சல்மான், ஜெமினி கணேசன் வேடத்தில் நடிக்கவிருப்பதும், இவர்களைத் தவிர அத்திரைப்படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதும் கூட நாமறிந்த செய்தியே! இதில் அறியாத செய்தி என்றால் அது; இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் நடிகர் மோகன்பாபு நடிக்கவிருக்கிறார் என்பது தான்.
சாவித்ரி நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படங்களில் ஒன்று ‘மாயாபஜார்’ இந்தத் திரைப்படத்தில் சாவித்ரியுடன் இணைந்து பலே காமெடியாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளிக் கொண்டவர் நடிகர் எஸ்.வி. ரங்கா ராவ்.
‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்
இது கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்’
- என்றொரு பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். அப்படியிருக்கையில் சாவித்ரியின் வாழ்க்கை படமாக்கப்படும் போது, அதில் எஸ்,வி.ரங்காராவ் இல்லாமலா?! இதோ எஸ்.வி ரங்காராவ் வேடத்தில், தான் நடிக்கவிருப்பதாக மோகன் பாபுவே ஒரு விழாவில் தெரிவித்திருப்பதாக செய்திகள் உலவுகின்றன. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு மோகன் பாபு தான், கடோத்கஜனாக அறிமுகமாகவிருக்கிறார் போல!
Related Article
மகளிர் மட்டும் படத்துக்கு பெண்கள் அளித்துள்ள ரேட்டிங்!
ஷில்பா வேடத்தில் விஜய் சேதுபதி! ரசிகர்களை அசத்திய புகைப்படம்!
‘அடி வாடி திமிரா’ பாடலில் முதல்முறையாக சூர்யா, ஜோதிகா மகள் தியா!
ஸ்ரேயா சரணுக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு என்ன?
தமிழில் உருவாகும் வெப் தொடர்கள்! பாலாஜி மோகன், கெளதம் மேனனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


