உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் மீண்டும் ஜோடி சேரும் விஜய் சேதுபதி - அஞ்சலி! 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி இருவரும் மீண்டும் ஜோடி சேரும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 7:16 pm IST

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி இருவரும் மீண்டும் ஜோடி சேரும் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.என்.ராஜராஜனின் 'கே புரொடக்ஷன்ஸ்' மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ்' ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

விஜய் சேதுபதியை வைத்து முன்னரே  ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய இரு படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இந்த புதிய படத்தினை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இறைவி படத்திற்குப் பிறகு இவர்களிருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.   

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் லிங்கா நடிக்கிறார். முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் துவக்க விழா ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது என்று தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.