தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷுக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், “அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்“ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், "ப்ளூ" குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹரசுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay has congratulated the Tamil film industry artists who have won National Film Awards.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










