நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள `நடிகையர் திலகம்' படத்தின் டீஸர் தமிழ் வருடப் பிறப்பன்று (ஏபர்ல் 14) வெளியாகியுள்ளது. இதன் தெலுங்கு டீஸரான மகாநதியும் வெளியாகி வைரலானது. இயக்குநர் நாக் அஸ்வின் நான்கு மொழியில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

பத்திரிகையாளர் கதாபாத்திரமான மதுரவாணியாக சமந்தாவும், அலூரி சக்கரபாணியாக பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்கள். அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்துப் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவ்வப்போது, இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இப்படத்தின் டீஸர் வெளியானதிலிருந்து படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டது. இன்று மாலை (26 ஏப்ரல்) இப்படத்தின் பாடலொன்று தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் சில போஸ்டர்களைப் பார்த்த தெலுங்கு திரை ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியின் கதாபாத்திரத்துக்கு சாலப் பொருத்தமாக உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி அருகின்றனர்.

சாவித்ரியின் உடல்மொழி அபாரமானது. எப்போதும் தலை நிமிர்ந்து நடக்கக் கூடியவர். பெண்மையின் நளினமும் அதே சமயம் துணிச்சலான ஒரு முகபாவமும் அவரது தனியழகு.

சாவித்ரியின் பார்வை அவருடன் பேசுபவரிடம் நேராகவே இருக்கும். இப்படி அவரது நுணுக்கமான உடல்மொழியை பின்பற்றியுள்ள கீர்த்தி சுரேஷ் தன்னை அப்பாத்திரத்தில் வெகு அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார், சால பாகுந்தி என்று பாராட்டியுள்ளனர்.

டோலிவுட்டில் மே 9-ம் தேதி மகாநதி வெளிவரும் அதே நாளில் தமிழில் நடிகையர் திலகம் வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


