/

காயமடையாத வீரன் இல்லை: அமலா பால்

90 சதவிகிதப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் படப்பிடிப்புக்குத் திரும்புவதாக...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 9:33 am

நயன்தாரா, த்ரிஷா போல கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கே.ஆர். வினோத் இயக்கும் அதோ அந்த பறவை போல படத்தில் அதுபோன்ற ஒரு வேடத்தில் நடித்துவருகிறார் அமலா பால். இப்படத்துக்கு இசை - ஜேக்ஸ் பிஜோய்.

சமீபத்தில் இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது அமலா பாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய கையில் தசைநார் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவச் சிகிச்சைக்காக கொச்சிக்குச் சென்றுள்ளார் அமலா பால். 

90 சதவிகிதப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் படப்பிடிப்புக்குத் திரும்புவதாக உறுதியளித்துள்ளார் அமலா பால். காயமின்றி எந்தக் கதாநாயகனும் கிடையாது. அதை நான் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையை உடைத்துக்கொண்டுள்ளேன். விரைவில் நலம் பெறுவேன் என்று சமூகவலைத்தளத்தில் பதிவு எழுதியுள்ளார். அப்பதிவையும் இடக்கையால் தான் எழுதியதாகக் கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.