இந்த வாரம் வெளியாகும் நான்கு தமிழ்ப் படங்கள்!
ஆகஸ்ட் மாத இறுதியில் பல படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இந்த வாரம் ஆகஸ்ட் 24 அன்று நான்கு தமிழ்ப் படங்கள்...


ஆகஸ்ட் மாத இறுதியில் பல படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இந்த வாரம் ஆகஸ்ட் 24 அன்று நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை, களரி, எச்சரிக்கை. இவற்றில் லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இரு படங்களுக்கும் அதிகக் கவனம் கிடைத்துள்ளன.
பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா நடிப்பில் ஏ.எ.ல். விஜய் இயக்கியுள்ள படம் - லக்ஷ்மி. இசை - சாம் சிஎஸ்.
விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம் - மேற்குத் தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்டனி பங்கு, காயத்ரி, ஆறு பாலா, தாமரை போன்றோர் நடித்துள்ளார்கள். திரைப்பட விழாக்களில் பல விருதுகள் பெற்றுள்ளது இந்தப் படம்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...