/

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம்: இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரும் பிரபல கிரிக்கெட் வீராங்கனை!

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வருகை தரவுள்ளார். ஆகஸ்ட் 23 அன்று நடைபெறவுள்ள...

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 9:13 am

எழில்

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வருகை தரவுள்ளார். ஆகஸ்ட் 23 அன்று நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் பாடல்களை வெளியிடுகிறார் மந்தனா.

இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ், அனிருத், இமான் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். அதே நாளில் படத்தின் டீசரும் வெளியிடப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.