காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா: ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது!

தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள மஹாவீர் கர்ணா என்கிற படத்தை ஆர்.எஸ். விமல் இயக்குகிறார்...

News image
Updated On :4 டிசம்பர் 2018, 12:18 pm

எழில்

கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள மஹாவீர் கர்ணா என்கிற படத்தை ஆர்.எஸ். விமல் இயக்குகிறார். ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை அவர் இயக்கியுள்ளார். வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்தப் படத்தை  நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கான சிறப்பு பூஜை, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் விமல், நடிகர் சுரேஷ் கோபி போன்றோர் கலந்துகொண்டார்கள். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 2020-ல் வெளியாகவுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.