கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், சனந்த் ரெட்டி, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, யோகி பாபு, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இசை - அனிருத். பேட்ட படம் ஜனவரி 10 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் அதிகாரபூர்வமான ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
இன்று காலை 10.25 மணிக்கு வெளியிடப்பட்ட பேட்ட ட்ரெய்லர் சுமார் 2 நிமிடம் 51 நிமிடம் ஓடுகிறது. படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் அனைவரும் இதில் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. ட்ரெய்லர் வெளியான 15 நிமிடத்தில் 50 ஆயிரம் லைக்ஸ், 35 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ், 50 நிமிடத்தில் 1,50,000 லைக்ஸ் என்று தொடர் சாதனை படைத்து வருகிறது. மேலும் பேட்ட படத்தின் ட்ரெய்லர் உலக அளவில் ட்விட்டரில் 6-வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேட்ட பட ட்ரெய்லர் வெளியானதிலிருந்து இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கும் நொடி வரை யூடியூபில் இதுவரை 26 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
படத்தில் ரஜினியின் லுக்ஸ் மற்றும் ஸ்டைல் அவரது பழைய படங்களில் வருவதைப் போலவே உள்ளது. ரஜினி இதில் காளி என்ற கதாபாத்திரத்தில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என்பதை ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 'மரண காட்டு’ பாக்கத்தானே போறே இந்த காளியோட ஆட்டத்தை’, 'சிறப்பான, தரமான சம்பவங்களை இனிமே தான் பார்க்கப் போறே..’, 'கொலை காண்ட்ல இருக்கேன்’ போன்ற வசனங்கள் ரஜினி is back to the pavilion என்று நினைக்க வைத்துள்ளது. மேலும் எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் ரஜினியை பனிப் படலப் பகல் நேரத்திலும், இரவில் டார்ச் லைட் ஒளியின் பின்னணியிலும் காணக் கிடைக்கும் காட்சிகள் வெகுவாக ரசிக்கும் வகையில் உள்ளது. மற்ற நடிகர்கள் இந்த ட்ரெய்லரில் அதிகம் மாஸ் கவனம் பெறுவது ரஜினி மட்டுமே என்றால் மிகையில்லை. ரஜினியின் உடைகள், கூலர்ஸ், துப்பாக்கியை அவரது பிரத்யேகமான ஸ்டைலில் சுழற்றுவது, ஹூடியுடன் கூடிய டி ஷர்ட்டில் அசத்துவது என வெகு நாட்கள் கழித்து ஒரு அசலான ரஜினி ட்ரெய்லரைப் பார்த்த நிறைவும் இதனால் ஏற்பட்டுள்ளது. இது தவிர #GetRajinified #SuperstarRajinikanth #PettaPongalParaak உள்ளிட்ட ஹாஷ் டேக்குகளும் இந்தியா அளவில் மாஸ் மரண டிரெண்டாகியுள்ளன.

நீண்ட காலம் கழித்து ரஜினியை ரஜினியைப் போலவே பார்த்த மாதிரி உணர்வு கிடைத்துள்ளது என இணைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ரசிகர்களின் இந்த வரவேற்பை பார்த்த படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பேட்ட படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. பொங்கல் லீவில் ஒரு தீபாவளி என்று முகநூலிலும் ரஜினி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


