டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'அட்டகத்தி' தினேஷின் மாமியாராக நடிக்கும் தேவயானி! 

புதுமுக இயக்குநர் காந்தி மணிவாசகத்தின் 'களவாணி மாப்பிள்ளை' திரைப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷின் மாமியாராக நடிகை தேவயானி நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:12 pm

DIN

சென்னை: புதுமுக இயக்குநர் காந்தி மணிவாசகத்தின் 'களவாணி மாப்பிள்ளை' திரைப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷின் மாமியாராக நடிகை தேவயானி நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

காலம்சென்ற இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம். பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்த இவர், 'ரேணிகுண்டா' , 'கருப்பன் திரைப்படங்களின் இயக்குனர் பன்னீர்செல்வத்திடமும் உதவியாளராக இருந்துள்ளார்.    

இந்நிலையில் இவர் தற்பொழுது 'அட்டகத்தி' தினேஷ், அதிதி மேனன் ஆகியோர் நடிப்பில் 'களவாணி மாப்பிள்ளை' என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தினேஷின் மாமியாராக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடிக்கவுள்ளார். இவர்களுடன்முனீஸ்காந்த், 'நான் கடவுள் ' ராஜேந்திரன், மனோபாலா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். என். ஆர்.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.

வரும் 15-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இப்படம் குறித்தும் தேவயானியின் கதாபாத்திரம் குறித்தும், இயக்குநர் காந்தி மணிவாசகம் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்த படம் முழுக்க முழுக்க பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள கிராமம் ஒன்றில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நிரம்பிய ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்னாக அதிதி நடிக்கிறார்.

படத்தில் தேவயானியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவருக்கும் தினேஷுக்கும் இடையே இருக்க கூடிய விஷயங்களை வைத்தே கதை நகர்கிறது. ஆனால் 'மாப்பிள்ளை', 'பூவா தலையா' போன்ற திரைப்படங்கள் போன்று இது அமையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.