கண்ணழகி பிரியா வாரியரைத் தொடரும் மலையாள நடிகை நிமிஷா! வைரலாகும் பரோட்டோ காட்சிகள்! விடியோ

முதலில் ஜிமிக்கி கம்மல் ஷெரில், அதனைத் தொடர்ந்து அண்மையில் பிரியா வாரியரின் புருவ அசைவு, தற்போது நிமிஷாவின் பரோட்டா,
கண்ணழகி பிரியா வாரியரைத் தொடரும் மலையாள நடிகை நிமிஷா! வைரலாகும் பரோட்டோ காட்சிகள்! விடியோ
Published on
Updated on
2 min read

முதலில் ஜிமிக்கி கம்மல் ஷெரில், அதனைத் தொடர்ந்து அண்மையில் பிரியா வாரியரின் புருவ அசைவு, தற்போது நிமிஷாவின் பரோட்டா, என்ன ஆச்சு இந்த நெட்டிசன்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு இந்த மூன்று விடியோக்களை வைரலாக்கிவிட்டார்கள் இணையவாசிகள். மலையாள நடிகை நிமிஷா படப்பிடிப்பு இடைவேளையின் போது கிராமத்திலுள்ள தேநீர் கடை ஒன்றில் பரோட்டா செய்யக் கற்றுக் கொள்ளும் விடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி, வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த விடியோவில் நிமிஷா டீ கடையினுள் உள்ள கிச்சனுக்குள் இருக்கிறார். அவர் முன்னால் பரோட்டா மாவும் கல்லும் உள்ளது. ஒற்றை கையால் மாவை எடுத்து லாவகமாகத் திரட்டி பரோட்டாவை தட்டுகிறார் நிமிஷா. சரியா வந்திருக்கா என்று அருகிலிருக்கும் பரோட்டா மாஸ்டரிடம் கேட்க, அதற்கு அவர் வேக வைத்த பரோட்டாவை எடுத்து நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் ஏற்கனவே சுட்டிருந்த பரோட்டாவை எடுத்துப் போட, அதற்கு நிமிஷா மறுப்பாக தலையாட்டியபடி, சிரித்துக் கொண்டே, கையை சுட்டுக் கொள்ள மாட்டேன்பா என்று சொல்கிறார். பரோட்டா தயாரிப்பது ஒரு கலை அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதெல்லாம் முடியாத காரியம் என்று சொல்லியபடி கிளம்புகிறார்.

நிமிஷா சஜயன் 'ஈடா' மற்றும் ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றுள், திலீஷ் போத்தன் இயக்கிய ‘தொண்டிமுதலும் திரிக்சாக்‌ஷியும்’ என்ற படம்தான் அவரது முதல் படம். அதில் அவர் ஏற்று நடித்த ஸ்ரீஜா என்ற கதாபாத்திரம் அவருக்கு  நல்ல அறிமுகமாக அமைந்தது. இதில் நிமிஷாவுடன் ஃபகத் ஃபாசில் மற்றும் சூரஜ் நடித்துள்ளார்கள். இதுவரை இரண்டே படங்களில் நடித்துள்ள நிமிஷா, ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அடுத்து நிமிஷா டொவினோ தாமஸுடன் நடித்திருக்கும் படம் 'குப்றசித்த பையன்'. மதுபால் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஒரு கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 

இதற்கு முன்னால் மலையாள நடிகை அனுஸ்ரீ படப்பிடிப்பு இடைவேளையில்  தோசை சுட்ட விடியோ இணையத்தில் ஒரு சுற்று சுற்றி வந்தது. தற்போது பரோட்டா. இது போன்ற காட்சிகள் ஏன் ரசிக்கபடுகின்றன என்பது புரியாத புதிர்தான். பிரியாவின் புருவ அசைவுகளாகட்டும், நிமிஷாவின் பரோட்டா நிமிடங்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்ட நிலையில், இந்த நடிகைகள் திடீர் புகழுக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் சரி என்கிறது மலையாள திரைவட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com