பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை மணம் செய்து கொண்டார். இந்த திருமணக் கொண்டாட்டம், விருந்து உபசரிப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், பாலிவுட்டில் இன்னொரு நட்சத்திர ஜோடிக்கும் திருமணம் நிச்சயக்கப்படவிருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அவர்கள் வேறு யாருமல்ல. பத்மாவதி, பாஜி ராவ் மஸ்தானி, ராம் லீலா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ரன்வீர் சிங்-தீபிகா படுகோன்தான். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த ஜோடி காதலித்து வருகிறார்கள் என்று பாலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. தீபிகா படுகோனின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 5) இந்த ஜோடி தமது திருமணத்தை நிச்சயம் செய்து கொள்ளவிருப்பதாக பாலிவுட் செய்திகள் கூறுகின்றன.

தீபிகா படுகோனின் 32-வது பிறந்தநாளை முன்னிட்டு தொடர் கொண்டாட்டத்திற்காக இலங்கை சென்றுள்ளனர் இந்த ஜோடி. புத்தாண்டை இந்த இருவரின் குடும்பங்களும் மாலத் தீவில் கொண்டாடி மகிழ்ந்தனர். பத்மாவதி பட விவகாரத்தால் மன அழுத்தட்த்ல் இருந்த தீபிகாவை அவரது பிறந்த நாளன்று மகிழ்விக்க எண்ணி, அத்தினத்தை சிறப்பாக கொண்டாட இரு குடும்பத்தாரும் திட்டமிட்டு ஸ்ரீலங்காவிற்குச் சென்றனர்.

அங்கு ஸ்னோர்கெல்லிங் ஆழ்கடல் பிரயாணம் உள்பட பலவிதமான உற்சாக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்து விதவிதமான அனுபவங்களை அவருக்கு வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் இந்தக் குடும்பங்கள் இணைந்து வெளிநாடு சென்றது பாலிவுட் சினிமா பத்திரிகைகளின் செய்திப் பசிக்கு விருந்தளித்தது.

அவர்களின் திருமண நிச்சயத்திற்காகத்தான் இலங்கை சென்றுள்ளனர் என்று செய்தி வெளியிட, அது வைரலாகத் தொடங்கியது. இந்நிலையில் இச்செய்தியை ரன்வீர் தரப்பு மறுத்துள்ளது. ஆனால் அனுஷ்கா ஷர்மா விராட் கோஹ்லி காதல் விவகாரத்திலும் இதேபோன்ற மறுப்புக்களை சந்தித்த மீடியாவினர் அந்த மறுப்பைப் பொருட்படுத்தவில்லை.

தீபிகா படுகோன் திருமண செய்தி அதிகாரபூர்வமாகவே விரைவில் வெளிவரும், அது பத்மாவதி படம் வெளியான மகிழ்ச்சியான தருணத்தையொட்டி இருக்கும் என்கிறார்கள் தீபிகா குடும்பத்தினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


