இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கமல் நாயகி வசுந்திரா தாஸா இவர்?

தமிழ் சினிமா பலவிதமான கதாநாயகியரைக் கடந்து வந்துள்ளது. சிலர் ஒன்றிரண்டு

News image
Updated On :5 ஜனவரி 2018, 4:26 pm IST

தமிழ் சினிமா பலவிதமான கதாநாயகியரைக் கடந்து வந்துள்ளது. சிலர் ஒன்றிரண்டு படங்கள் நடித்து அப்படங்களில் தங்களின் பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்துவிடுவார்கள். அதன் பின் அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் பிஸியாகிவிடுவதும் உண்டு. 

Story image

பெங்களூரைப் பூர்விகமாக கொண்ட வசுந்திரா தாஸ் அப்படிப்பட்ட ஒரு நடிகை. நடிப்பு தவிர்த்து கவிதை எழுதுபவர், திறமையான பேச்சாளர் மற்றும் பாடகியாகவும் புகழ் பெற்று விளங்கினார். தமிழில் கமல் ஹாசனுடன் ஹேராம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அவரின் குரலும் கொஞ்சிப் பேசிய தமிழ் மொழியும் அப்போதைய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Story image

அதன் பின் மலையாள திரையுலகிலும் ஜொலித்தார் வசுந்திரா. அவர் நடிப்பில் வெளியான ராவண பிரபு என்ற படம் திறமையான நடிகை என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் முதன் முதலில் தமிழில் பாடிய பாடல் ஷக்கலாகா பேபி இன்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Story image

அமுல் பேபி போல அழகுடன் திகழ்ந்த வசுந்திரா தமிழில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த படமான சிட்டிசன் பெரும் புகழை அவருக்கு ஏற்படுத்தியது. பூக்காரா என்ற பாடலை அவரே பாடி, அஜித்துடன் நடித்திருந்தார் வசுந்தரா தாஸ்.

Story image

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு டிரம்மர். அதன் பின் நடிப்புக்கு குட் பை சொல்லில்விட்டு இசையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கணவருடன் இணைந்து ட்ரம்ஜாம் என்ற அமைப்பை நடத்திவருகிறார். சிறந்த பேச்சாளர், பாடகி என்று தொடர்ந்து பிஸியாக இயங்கிவருகிறார்.

Story image

சமீபத்தில் அவரது புகைப்படங்கள் மீடியாவில் வெளியாகி உள்ளன. 

Story image

உடல் எடை சற்று அதிகரித்திருந்தாலும், அதே அழகுடனும் மிடுக்குடனும் காணப்படுகிறார் வசுந்திரா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.