/

சசிகுமார் - சமுத்திரக்கனி மீண்டும் இணையும் நாடோடிகள் 2

2009-ல் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது...

News image
Updated On :17 ஜனவரி 2018, 6:59 am

எழில்

2009-ல் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் நாடோடிகள் 2 படம் தொடங்கப்பட்டுள்ளது.

நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக சசிகுமாரும் இயக்குநராக சமுத்திரக்கனியும் மீண்டும் பணியாற்றவுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கதாநாயகிகள் உள்ளிட்ட இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.