சுமாரான வெற்றி என்று விளம்பரப்படுத்தும் பலூன் படக்குழு!
ஜெய் படத்தின் 25-வது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சுமாரான வெற்றி என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது...


பலூன் படத்தின் 25-வது நாள் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன். இசை - யுவன் சங்கர் ராஜா.
சமீபத்தில் வெளியான இந்தப் படம் சர்ச்சைகளால் முதலில் கவனம் பெற்றது. ஜெய் ஏற்படுத்திய இடைஞ்சல்களால் ரூ. 1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதை அவர் திருப்பித் தரவேண்டும் என்று பலூன் படத் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. படம் வெற்றியடைந்தாலும் தான் மகிழ்ச்சியில் இல்லை என பட இயக்குநர் சினிஷ் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் ஜெய் படத்தின் 25-வது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சுமாரான வெற்றி என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.
ஓடாத படத்துக்குக்கூட வெற்றி நடை போடுகிறது என்று விளம்பரம் செய்யும் திரையுலகில் சுமாரான வெற்றி என்று உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதால் பலூன் படக்குழுவினருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...