விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் ‘டப்ஸ்மேஷ்’ மிருணாளினி!
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துவருவதால் மிருணாளினி சிறிய வேடத்தில் நடிப்பதாக...


டப்ஸ்மேஷ் என்பது சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்பாகும். அதில் ஈடுபட்டு புகழ்பெற்றவர்களில் முதன்மையானவர் பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி. அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து வந்தவர், பிறகு நகல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஆரண்ய காண்டம் புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க மிருணாளினிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகவலை மிருணாளினியும் ஃபேஸ்புக்கில் உறுதிபடுத்தியுள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துவருவதால் மிருணாளினி சிறிய வேடத்தில் நடிப்பதாக அறியப்படுகிறது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...