நாளை ரிலீஸாகவிருக்கும் தமிழ்படம் 2 ஒரு மினி ட்ரைலர்!
கலாய்த்தல் என்பதற்கான அர்த்தத்தை டிக்ஷனரியில் தேடினால் இனி தமிழ்படம் 2 என்று தான் வரும். அந்தளவுக்கு நாட்டில் ஒரு இலை விழுவதைக் கூட துல்லியமாக கணித்து கலாய்த்துள்ளனர் இந்த டீம்.
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் - 2.0 படத்தின் டைட்டிலை கலாய்க்கும் விதமாக இந்தப் படத்துக்கு முதலில் தமிழ்படம் 2.0 என்று தான் தலைப்பு வைத்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இனி தமிழ்படம் 2 என்கிற பெயரிலேயே படம் வெளியிடப்படும் என்றனர்.
தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அவருடைய இரண்டாவது படமான ரெண்டாவது படம் இன்னும் வெளிவராத நிலையில் தனது மூன்றாம் படத்தையே இரண்டாம் படமாக அதுவும் 2 என்ற டைட்டிலில் வெளியிடுகிறார். தலைப்பிலேயே கிண்டல் தொனி உள்ளதால் முதல் பாகம் போலவே இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் அதிகமிருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கத் தொடங்கினர். அதன் ஹைலைட்டாக இந்த அக்மார்க் தமிழ்ப்படத்தின் டைட்டில் முழுக்க இதுவரையில் Thamizh Padam 2 என இங்லீஷில்தான் எழுதப்பட்டு வருகிறது.
மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே போன்றோர் தமிழ்படம் 2 வில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்ய, அடுத்தடுத்து வெளியான போஸ்டர்களும் டீஸர்களும் படத்துக்கான மெகா ஓபனிங்கை ஏற்படுத்திவிட்டன. இவ்வளவு நாள் சூரியனின் கீழ் உள்ள அனைத்தையும் கலாய்த்தவர்களை நாமும் கலாய்க்கப் போகிறோமா அல்லது விசில் அடித்து கைதட்ட போகிறோமா என்பது நாளை தெரிந்துவிடும். மினி ட்ரையிலராக படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்ட டீஸர்களை பார்க்கலாம் :
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

