சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.-க்குக் கெளரவம்: பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’!
பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை...


முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துவருகிறார் பிரபுதேவா.
பொன் மாணிக்கவேல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஏ.சி. முகில் இயக்கி வருகிறார். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளார்.
இசை - இமான். பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை.
தமிழகத்தில் கோயில் சிலைகள் திருட்டுத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சமீபகாலமாக அதிகக் கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருடைய பெயர், பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...