தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மந்தமாக உள்ள காலா பட முன்பதிவு: என்ன காரணம்?

வழக்கமாக ரஜினி படங்களுக்கு உள்ள தீவிரமான முன்பதிவுகளை இந்தப் படத்தில் காணமுடியவில்லை என்று...

News image
Updated On :5 ஜூன் 2018, 12:14 pm

எழில்

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலா படத்தின் டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிற குறை உருவாகியுள்ளது. முதல் நாளின் டிக்கெட்டுகள் மட்டுமே மிக அதிகமாக விற்பனையாகியுள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள்களின் டிக்கெட்டுகளை எளிதாக வாங்கக்கூடிய சூழலே இன்னமும் உள்ளது. இதனால் வழக்கமாக ரஜினி படங்களுக்கு உள்ள தீவிரமான முன்பதிவுகளை இந்தப் படத்தில் காணமுடியவில்லை என்று பரவலான கருத்து நிலவுகிறது. டிக்கெட் விற்பனை செய்கிற இணையத்தளங்களிலும் இதைக் காணமுடிகிறது. எதனால் இப்படி நேர்ந்தது? 

திரையரங்குகளின் தரப்பில் சொல்லப்படுகிற காரணங்கள் இவை:

Story image

* தயாரிப்பு நிறுவனம் வேண்டுமென்றே படத்தை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும். இது கடைசியில் நல்ல முடிவுகளைத் தரலாம். அல்லது ரஜினி படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனத்துக்குப் போதிய அனுபவம் இல்லை.

* மிக முக்கியக் காரணம் - கோடை விடுமுறைக்குப் பிறகு படம் வெளியாகிறது. பாகுபலி போல கோடை விடுமுறைச் சமயத்தில் படம் வெளியாகியிருந்தால் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்திருக்கும். ஆனால் பள்ளிகள் திறந்த பிறகு படம் வெளியாவதால் முன்பதிவு குறைவாக உள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி தான் இந்த நிலைக்குக் காரணம்.

* கபாலி டீசர் ரசிகர்களிடம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் காலாவின் டீசரோ பாடல்களோ பெரிய அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தைக் காணவேண்டும் என்கிற ஆவல் குறைவாக உள்ளது. 

* முதல்முறையாக ரஜினியின் அரசியல் கருத்துகள் அவருடைய படத்தின் வசூலை தீர்மானிக்கவுள்ளன. சமீபத்திய ரஜினியின் கருத்துகளுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் உண்டாகின. இதனால் அந்தக் கோபம், படத்தின் மீது எதிரொலித்துள்ளது.

* மீண்டும் பா. இரஞ்சித்துடன் படம் பண்ணுவதாலும், கதையமைப்பும் பெரிதளவில் வித்தியாசமாக இல்லாததாலும் எதிர்பார்ப்பு குறைவாக உள்ளது.

திரையரங்கு அதிபர்கள் பல்வேறு பேட்டிகளில் இக்காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதேசமயம் பலரும் ஒப்புக்கொள்வது, இந்த அம்சங்கள் படத்துக்கு நல்ல முடிவுகளையும் அளிக்கலாம். எதிர்பார்ப்பில்லாமல் படம் பார்க்கச் செல்லும் ரசிகன், படத்தை விரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

காலா படத்தின் முடிவு எப்படி இருக்கப்போகிறது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.