அம்மாடி! 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உண்மையாகவே குதித்தாரா ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ்? (விடியோ)

ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' வரிசைப் படங்கள்,
அம்மாடி! 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உண்மையாகவே குதித்தாரா ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ்? (விடியோ)
Published on
Updated on
1 min read

ஹாலிவுட் நட்சத்திரமான டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' வரிசைப் படங்கள், உலகத் திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும், வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாகவும் அமைந்தவை.

அதன் புதிய பாகமாக 'மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட்’ என்ற படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அதிரடி ஆக்‌ஷன் ஜானரில் உருவான இந்த ஸ்பை திரில்லர் படத்தில் வெற்றி நாயகன் டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ரெபாக்கா பெர்குசான், சைமன் பெக், மைக்கேல் மோனஹன், சீன் ஹாரிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் மேக்குரைன் இயக்கியுள்ளார். 

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் பலத்த அடி பட்டது. சிகிச்சைக்கும் ஓய்வுக்கும் பின்னர் படப்பிடிப்பில் மீண்டும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விரைவாக ஷூட்டிங் தொடர ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் டாம் க்ரூஸ்.

'மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட்’ படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்களின் பலத்த ஆதரவைப் பெற்ற நிலையில், மே 15-ம் தேதி இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்டனர் படக்குழுவினர். வெளியான மூன்று நாட்களில் இதுவரை 10 ஆயிரம் கருத்துரைகளையும், பத்து மில்லியன் பார்வையாளர்களையும் மிஷன் இம்பாஸிபிள் ஃபால் அவுட் ட்ரெய்லர் பெற்றது. அவ்வகையில் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துவிட்டது.

படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் டாம் குரூஸ் கீழே குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் டாம் குரூஸ் டூப் போடாமல், சி.ஜி வொர்க்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் ஏதுமின்றி தானே அத்தகைய உயரத்திலிருந்து மிகத் துணிச்சலாக குதித்துள்ளார். இந்த விடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ட்விட்டரில் இதனை டாம் க்ரூஸ் பகிர்ந்ததும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அந்தப் படத்தின் ஸ்டன்ட் கோ ஆர்டினேட்டர் வேட் ஈஸ்ட்வுட் (Wade Eastwood) கூறுகையில், 'விமானத்திலிருந்து கீழே குதிக்கும் 'ஹாலோ ஜம்ப்’ என்று சொல்லப்படும் இந்த ஜம்பை சினிமா காட்சிக்காக செய்துள்ள ஒரே நடிகர் டாம் குரூஸ் ஒருவர் மட்டும்தான். அந்தக் காட்சி நிஜமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டார் டாம் குரூஸ். இந்தக் காட்சிக்காக அவர் நூறு தடவை விமானத்திலிருந்து குதித்து பயிற்சி எடுத்துள்ளார். மேலும் இந்தக் காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்புக்கு சற்று பஞ்சம் இருக்காத சேஸிங் காட்சிகள் உட்பட, பதற்றப்படுத்தும் ஹெலிகாப்டர் சேஸிங்கில் அசத்தியிருக்கிறார் இந்த ஹாலிவுட் ஸ்டார். இந்தப்படம் வரும் ஜுலை 27-ம் தேதி அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com