தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சென்னையில் உச்சபட்ச வசூல்: காலா படம் சாதனை!

காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எந்தப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை...

News image
Updated On :8 ஜூன் 2018, 10:54 am

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான காலா படம் சென்னையில் மட்டும் முதல் நாளன்று ரூ. 1.76 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வருடமாக இரு படங்கள் சென்னையில் முதல்நாளன்று அதிக வசூலை எட்டின. ஆகஸ்ட் 24 அன்று வெளியான அஜித் நடித்த விவேகம் படத்தின் முதல் நாள் சென்னை வசூல் - ரூ. 1.21 கோடி. பிறகு தீபாவளி சமயத்தில் வெளியான விஜய் நடித்த மெர்சல் படம் சென்னையில் முதல் நாளன்று ரூ. 1.52 கோடியை அள்ளியது. இந்நிலையில் தற்போது டிக்கெட் விலை அதிகமானதாலும் ரசிகர்களின் அதிக வரவேற்பினாலும் அவ்விரு படங்களின் வசூலைத் தாண்டியுள்ளது காலா படம். இந்தப் படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாளன்று சென்னையில் ரூ. 1.12 கோடி வசூலித்தது.

காலாவுக்கு நிகராக சென்னையில் முதல் நாளன்று வேறு எந்தப் படமும் இந்த வசூலை எட்டியதில்லை. இந்தப் புள்ளிவிவரம் காலா படத்துக்கும் ரஜினி - பா.இரஞ்சித் ஆகிய இருவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. எனினும் முதல்நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.