மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அடுத்த வருடத்துக்குத் தள்ளிப் போகும் ரஜினி - ஷங்கரின் 2.0 பட வெளியீடு!

கடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று...

News image
Updated On :9 ஜூன் 2018, 10:55 am

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.

கடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என ரஜினி அறிவித்தார். ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் 2.0 படம் வெளியாக வாய்ப்பில்லை என்று மும்பை ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பல காட்சிகளுக்கு விஎஃப்எக்ஸ் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் இந்த வருடம் வெளியாகாது, அதற்குப் பதிலாக அடுத்த வருட ஆரம்பத்தில் 2.0 படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படங்களின் தரத்தில் காட்சிகள் அமையவேண்டும் என்று ஷங்கர் விருப்பப்படுவதால் அதன்படியே காட்சிகள் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தாமதத்தால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியிருப்பதாகத் தெரிகிறது. இந்த வருட இறுதியில் படத்தின் வெளியீடு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.